அனைவருக்குமான வீடியோ அழைப்புகள் மற்றும் மீட்டிங்குகள்.
Google Meet என்ற ஒரே சேவையின் மூலம் எந்தச் சாதனத்திலும் பாதுகாப்பான, உயர்தர வீடியோ மீட்டிங்குகளையும் அழைப்புகளையும் அனைவரும் செய்யலாம்.
பாதுகாப்பான மீட்டிங்குகள்
உங்கள் தகவல்களையும் தனியுரிமையையும் பாதுகாக்க Google பொதுவாகப் பயன்படுத்தும் அதே பாதுகாப்பு வழிமுறைகளையே Meetடும் பயன்படுத்துகிறது. Meet வீடியோ கான்ஃபிரன்ஸ்கள் என்கிரிப்ட் செய்தே அனுப்பப்படுகின்றன, பாதுகாப்பைப் பலப்படுத்தும் வகையில் தொடர்ந்து எங்கள் பாதுகாப்பு வழிமுறைகளைப் புதுப்பித்தும் வருகிறோம்.
எங்கிருந்தும் சந்திக்கலாம்
Google Meetடில் உங்கள் ஒட்டுமொத்தக் குழுவையும் சந்திக்கலாம், பிசினஸ் புரொப்போசல்களை வழங்கலாம், பள்ளி வேலைகளில் ஒன்றிணைந்து பணிபுரியலாம், நேருக்கு நேர் பார்த்துப் பேசலாம்.
வணிக நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் பிற அமைப்புகள் தங்கள் டொமைனில் உள்ள 1,00,000 பேர் வரை பார்க்கும் வகையில் மீட்டிங்குகளை லைவ் ஸ்ட்ரீமிங் செய்ய முடியும்.
எங்கிருந்தும் எந்தச் சாதனத்திலும் Meetடைப் பயன்படுத்துங்கள்
விருந்தினர்கள் தங்கள் கம்ப்யூட்டரில் சமீபத்திய இணைய உலாவி எதிலிருந்தும் சேரலாம். எந்தவொரு மென்பொருளையும் நிறுவத் தேவையில்லை. மொபைல் சாதனங்களில் அவர்கள் Google Meet ஆப்ஸ் மூலம் சேரலாம். விருந்தினர்கள் Google Nest Hub Max மூலமாகவும் மீட்டிங்குகள் மற்றும் அழைப்புகளில் சேரலாம்.
தெள்ளத்தெளிவான மீட்டிங்குகள்
நீங்கள் எங்கிருந்தாலும் உயர்தர வீடியோ அழைப்பு அனுபவத்தை உங்களுக்கு வழங்குவதற்காக, நெட்வொர்க் வேகத்தை Google Meet தானாகச் சரிசெய்துகொள்கிறது. உங்களைச் சுற்றிலும் இரைச்சல் இருந்தாலும் AI மேம்படுத்தல்களின் காரணமாக உங்கள் அழைப்புகள் இரைச்சலின்றித் தெளிவாக இருக்கும்.
அனைவரையும் சந்திக்கலாம்
Google வழங்கும் ’பேச்சு அறிதல்’ தொழில்நுட்பத்தில் இயங்கும் உடனடி வசன வசதியின் மூலம் Google Meet ஆனது மீட்டிங்குகளை மிகவும் பயனுள்ளதாக்குகிறது. மொழி புரியாதவர்கள், செவித்திறன் குறைபாடு உள்ளவர்கள் அல்லது இரைச்சலான இடங்களில் இருந்து பங்கேற்பவர்களுக்கு, மீட்டிங்கில் என்ன பேசுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள உடனடி வசனங்கள் மிகவும் உதவிகரமாக உள்ளன (ஆங்கிலத்தில் மட்டும் கிடைக்கிறது).
இணைந்திருங்கள்
எளிதாகத் திட்டமிடலாம், எளிதாக ரெக்கார்டு செய்யலாம், பங்கேற்பவர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கும் வகையில் காட்சியமைப்புகள் தானாகவே தேவைக்கேற்ப மாறும்.
உங்கள் திரையைப் பகிரலாம்
உங்கள் திரை முழுவதையும் பகிர்ந்தோ ஒரு சாளரத்தை மட்டும் பகிர்ந்தோ ஆவணங்கள், ஸ்லைடுகள், விரிதாள்கள் போன்றவற்றை பிறருக்குக் காண்பித்து விளக்கலாம்.
பெரிய மீட்டிங்குகளையும் சுலபமாக நடத்தலாம்
மீட்டிங்கில் சேர நிறுவன/வெளிப் பயனர்கள் 500 பேர் வரை அழைக்கலாம்.
ஃபோனில் இருந்தே சேரலாம்
Google Meet ஆப்ஸ் மூலம் வீடியோ மீட்டிங்கில் சேரலாம் அல்லது மீட்டிங் அழைப்பில் உள்ள டயல்-இன் எண்ணை அழைப்பதன் மூலம் ஆடியோ மட்டும் கேட்கும் வகையில் மீட்டிங்கில் சேரலாம்.
கட்டுப்பாடு உங்களிடம்
மீட்டிங்குகள் எப்போதும் பாதுகாப்பானவை. மீட்டிங்கில் யாரெல்லாம் சேர முடியும் என்பதை மீட்டிங் நடத்துபவர்கள் கட்டுப்படுத்தலாம். அவர்கள் அனுமதிக்கும் நபர்கள் மட்டுமே மீட்டிங்கில் சேர முடியும்.
நிறுவனத்திற்குள்ளான நிகழ்வுகளை பிராட்காஸ்ட் செய்யலாம்
டவுன் ஹால் மீட்டிங், சேல்ஸ் மீட்டிங் எனப் பல வகை மீட்டிங்குகளை லைவ் ஸ்ட்ரீமிங் செய்யலாம். உங்கள் டொமைனில் உள்ள 1,00,000 பேர் வரை லைவ் ஸ்ட்ரீமிங்கைப் பார்க்க முடியும்.
முன்னணி நிறுவனங்கள் Google Meetடை நம்புகின்றன
முக்கிய கேள்விகள்
Google Hangouts, Hangouts Meet, Google Meet ஆகியவற்றுக்கிடையே உள்ள வேறுபாடு என்ன?
Hangouts Meet, Hangouts Chat இவை இரண்டும் ஏப்ரல் 2020ல் முறையே Google Meet, Google Chat என்று பெயர் மாற்றப்பட்டன. கிளாசிக் Hangouts பயனர்கள் அனைவரையும் புதிய Meet மற்றும் Chat தயாரிப்புகளுக்கு இடமாற்றுவோம் என்று 2019ல் அறிவித்திருந்தோம். தொழில்முறைத் தரத்திலான ஆன்லைன் வீடியோ கான்ஃபிரன்ஸிங் வசதியை எல்லோருக்கும் வழங்குவதற்காக, மே 2020ல் Google Meetடின் கட்டணமில்லாப் பதிப்பை அறிமுகப்படுத்தினோம்.
Google Meet பாதுகாப்பானதா?
ஆம்! உங்கள் தரவைப் பாதுகாக்கவும் உங்கள் தனியுரிமைக்குப் பாதுகாப்பளிக்கவும் Google Cloudடின் பாதுகாப்புமிக்க வடிவமைப்பிலான உட்கட்டமைப்பை Meet பயன்படுத்துகிறது. எங்கள் தனியுரிமை உறுதிப்பாடுகள், தவறான பயன்பாட்டிற்கு எதிரான நடவடிக்கைகள், தரவுப் பாதுகாப்பு ஆகியவற்றைப் பற்றி இங்கே அறியலாம்.
வெளிப் பயனர்கள் அழைப்பில் சேர முடியுமா?
நிச்சயமாக. Google Meet கட்டணமில்லாப் பதிப்புக்கு, அனைத்துப் பங்கேற்பாளர்களும் Google கணக்கில் உள்நுழைந்தால் மட்டுமே சேர முடியும். பணி அல்லது தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியைக் கொண்டு Google கணக்கை உருவாக்கலாம்.
Google Workspace வாடிக்கையாளர்கள் மீட்டிங்கை உருவாக்கி Google கணக்கு இல்லாதவர்களையும் கூடச் சேர அழைப்பு விடுக்க முடியும். மீட்டிங்கில் பங்கேற்கும் அனைவருக்கும் இணைப்பையோ மீட்டிங் ஐடியையோ அனுப்பினால் போதும்.
Google Meetடைப் பயன்படுத்தக் கட்டணம் எவ்வளவு?
Google கணக்கு வைத்திருக்கும் எவரும் எந்தவொரு கட்டணமும் இன்றி வீடியோ மீட்டிங்கை உருவாக்கலாம், அதில் 100 பங்கேற்பாளர்கள் வரை அழைக்கலாம், ஒவ்வொரு மீட்டிங்கையும் 60 நிமிடங்கள் வரை நடத்தலாம்.
மீட்டிங்கில் இணைவதற்கான சர்வதேச எண்கள், மீட்டிங்கை ரெக்கார்டு செய்தல், லைவ் ஸ்ட்ரீமிங் போன்ற கூடுதல் அம்சங்களுக்கும் நிர்வாகக் கட்டுப்பாடுகளுக்கும் திட்டங்களும் கட்டணங்களும் என்பதைப் பார்க்கவும்.
Google Meet இணைப்புகள் காலாவதியாகுமா?
ஒவ்வொரு மீட்டிங்கிற்கும் தனிப்பட்ட மீட்டிங் குறியீடு வழங்கப்படும். மீட்டிங் உருவாக்கப்பட்ட Workspace தயாரிப்பைப் பொறுத்து குறிப்பிட்ட நேரத்தில் இந்தக் குறியீடு காலாவதியாகிவிடும். இங்கே மேலும் அறிக.
Google Meet எனது தொழிற்துறைத் தேவைகளுக்கு இணங்குகிறதா?
Google Meet உட்பட எங்கள் தயாரிப்புகளின் பாதுகாப்பு, தனியுரிமை, இணக்கக் கட்டுப்பாடுகள், சான்றிதழ்கள், இணக்கத்திற்கான சான்றளிப்புகள், உலகளவில் உள்ள தரநிலைகளுக்கு இணங்குவதை உறுதிப்படுத்தும் தணிக்கை அறிக்கைகள் ஆகியவை குறித்து தனிப்பட்ட முறையில் காலமுறைப்படி சரிபார்ப்பு மேற்கொள்ளப்படுகின்றன. சான்றிதழ்கள், சான்றளிப்புகள் ஆகியவற்றின் உலகளாவியப் பட்டியலை இங்கே பார்க்கலாம்.
எனது நிறுவனம் Google Workspaceடைப் பயன்படுத்துகிறது. இருப்பினும் எனது Calendarரில் Google Meet ஏன் இல்லை?
IT நிர்வாகிகள் Google Workspace அமைப்புகளைக் கட்டுப்படுத்துவார்கள். Google Calendarரின் இயல்பான வீடியோ கான்ஃபிரன்ஸ் சேவையாக Google Meet இருக்க வேண்டுமா என்பது போன்றவை இதிலடங்கும். உங்கள் நிறுவனத்தில் Google Meetடை எப்படி இயக்குவது என்பதை அறிய, Google Workspace நிர்வாகிகளுக்கான உதவி மையத்திற்குச் செல்லவும்.